வானத்துப்பெண்ணே.


வானத்து பெண் மயிலே
வாசமுள்ள பூங்காற்றே…!

வாடகைக்கு குடியிருக்கும்
வாலிபத்தின் அகல்விளக்கே.

பாசமுள்ள உன்னை
நேசமுடன் அங்கு

வான்வெளியில் வீடமைத்து
வாழவுன்னை சொன்னது யார்…? .

…சிவனேஸ்…

ஓவியா.


ஓவியமாய் நீ
எனக்குள் இருந்து
உணர்வுகளை செதுக்குவதால்
உறங்காமல் தவிக்கிறது.
உண்மையான அன்பு.
உணரவேண்டும் நீயும்..
அலைமோதும் நினைவுகளோ..
ஆளவேண்டும் உன்னையும்
அப்போது தெரியும்
அன்புப் பிணைப்பென்றால்
அறுக்காத சங்கிலியென்று…!

…சிவனேஸ்…

வரட்டுக்குணம்.

மரணப்படுக்கையிலும்   வர்க்கபேதம்..
மறுபிறவி    எடுத்தாலும்
மறக்காமல்    இருப்பதற்கு.

…சிவனேஸ்…  

Follow

Get every new post delivered to your Inbox.