மாலைப்பொழுதே…!

மனதை மயக்கிடும்
மாலைப் பொழுதே..
மவுசு கொஞ்சம்
அதிகம் உனக்கு.

மாலை என்றதும்
மனதை மயக்குகிறாய்.
மணிக் கணக்காய்
மனங்களை கவர்கிறாய்.

கற்பனைக் குதிரைக்கும்
கடிவாளம் இடுகிறாய்.
காத்து இருப்பதும்
தொடர்கதை என்கிறாய்.

காதலர் மனங்களை
களிப்புற வைக்கிறாய்.
கசக்காமல் இருந்திட
நாளையும் வருகிறாய்.

நம்பிக்கை உடன்தான்
நாடுது உன்னை.
நாயகி நீயென்று
நம்புது மனங்கள்.

காலைச் சூரியனும்
காதலிக்கிறான் உன்னை.
மாலை என்றதும்
அவன் முகமும்
வெட்கத்தால் சிவக்குது.

அந்தி நேரத்தில்
அந்தரங்கம் தொங்கிடும்.
வந்திறங்கி மனதுள்..
தொந்தரவும் செய்திடும்.

மனித அவலங்கள்
சங்கிலித் தொடர்தான்.
சங்கடங்கள் வருவதும்
போவதும் நிகழ்வுதான்.

மாய வலைக்குள்
மனிதர்கள் நடமாட்டம்
மனம்விட்டுச் சிரிப்பாய்
மாலையே நீயும்.

ஆனாலும் நீயோ..
வரவேண்டும் தினமும்
காத்திருக்கும் மனங்களை
களிப்புற வைப்பதற்கு.

…சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6968