மலர்ந்தாயோ எனக்காக…!

ஓடி  வரும்   தென்றலே
குயில்    பாட்டு  கேட்கிறதா…?
வான்நிலவின்    தங்கை   அவள்
பாடும்   பாட்டு   கேட்கிறதா…?

சுட்டெரிக்கும் சூரியனும்
மையல்   கொண்ட   மங்கையவள்
தொட்டுச்   செல்லும்  காற்றுக்கூட
ரகசியமாய்    காதல்  சொல்லும்…!    

சலசலக்கும்   ஓடை    நீரில்…அவள்
கொலுசுமணி    தினம்   கேட்கும்.
நீந்தி    வரும்    மீன்கள்கூட
சிலகணங்கள்    தமை    மறக்கும்

சிரித்தாலே    போதும்   அவள்
இசைக்கருவிகளும்    செயலிழக்கும்…!
பார்வை   ஒன்று   பட்டாலே
இரவெல்லாம்    பகலாகும்…!

சுகமான    ராகத்தால்
இசைமாரி    பொழிகின்றாள்
கவிபாடி   எனக்குள்ளே
களி    நடனம்    புரிகின்றாள்.

வானத்துப்  பரம்பரையில்
வந்துதித்த    பாவையவள்
வந்து  சொல்லிக்  காதோரம்   என்னை
சொக்கவைத்துச்   சென்றாளே…!

விண்மதியை   கற்பனையில்..
கவிவடிக்கும்   கவிஞர்களோ  பலகோடி..
இவளெனக்கு   சொந்தமென்றால்     
சும்மா  நான்   இருப்பேனோ…?         

…சிவனேஸ்…

Follow

Get every new post delivered to your Inbox.