பூவே பூச்சூடவா….!

நெஞ்சுக்குள் ஏன் பூத்தாய்….?
நினைவுகளால் ஏன் சுட்டாய்….,
மனதுக்குள் ஏன் வந்தாய்….?
மாலையிட ஏன் மறுத்தாய்….?

காதலை நீ சொன்னது..
கன்னி உன் இளமை.
காதலை ஏற்றது…
காளை என் பக்குவம்.

இதயத்தை நீ கொடுத்தாய்.
அது உன் அறியாமை.
அதை ஏற்றுக்கொண்டது..
நான் செய்த தியாகம்.

சுட்டெரிக்கும் சூரியனும்
சுடு தணலும் பட்டபோதும்
சுகம் கண்டேன்….
சுற்றி வந்து காதலித்தேன்

இத்தனைக்குப் பின்பும்
காதலுக்கு ஒத்திகையா…?
கன்னி உனக்கேன்….
காதல் மேல் கோபம்.

புரிந்துணர்ந்த காதலிது
புரியாமல் போனது ஏன்….?
பூவை உனக்குள்..
பூகம்பம் வந்தது ஏன்…..?

தேன் மொழி பேசி..
எனக்குள் திரவியமானவளே..
கனி மொழி தந்து..
என்னை கவர்ந்திழுத்தவளே….!

காரணம் இல்லாமல்….
காதலை ஏன் வெறுத்தாய்…?
காகித பூவா… காதல்
நான் கசக்கி எறிந்துவிட….?

பிரியமுடன் பழகிய …
என் பிரியத்துக்குரியவளே…
காதல் பிரிவு வேண்டாம்.
தவிப்புகளை என்றும்….
தாங்காது உள்ளம்.

புரியவில்லை இன்னுமென்றால்..
போதும் உன் காதல்..
போலி வேசம் வேண்டாம்.
மறந்துவிடு என்னை….!

புரிந்து கொண்டால் நீ….
புதுப்பித்து நம் காதலை
பொலிவுறச் செய்திடலாம்.
பூவே …. பூச்சூடவா…..

…சிவனேஸ்…

Follow

Get every new post delivered to your Inbox.