புரியாத காதல்.

மனதைத் தளரவிட்டேன்.
மங்கை உன்னை
கண்ட பின்பு.

நினைவுகளை சோரவிட்டேன்.
நிலவே உன்னை
நேசித்த பின்பு.

கற்பனையை வளர்தெடுத்தேன்.
கன்னி உன்னை
கரம் பிடிப்பதற்கு.

உன்மனமும் மாறவில்லை.
ஏனென்றும் தெரியவில்லை.
எழுதிடவும் ஒன்றுமில்லை.

இதுதான் காதலென்றால்
உன்மனமும் கல்லா…?
எனக்கொன்றும் புரியவில்லை.

காதலைச் சொன்னதுவும்
நீதானே முதலில்
காயப்படுவது நானா…?

மாறுவாய் நீயென்று
மனமேனோ சொன்னதனால்
மாதங்கள் போயிற்று.

நாட்களும் தினமென்னை
நையாண்டி செய்கிறது.
காதல்வெறும் பொய்யென்று.

காதல் வடுக்களினால்
காயப்பட்ட மனம்
கண்ணீர் வடிக்கிறது.

காலம் பதில்சொல்லுமென்று
காத்திருந்து காத்திருந்து
இப்போ… ….

உறக்கத்தை தொலைத்துவிட்டேன்.
உன்னிடம் நான்
மோகம் கொண்டதனால்..

பசியையும் தொலைத்துவிட்டேன்.
பாவை உன்னை
மனம் தேடுவதால்.

பாவம் என்று
நீ நினைத்தால்
நம்காதல் வாழும்.

இனியவளே நீ சொல்லு
ஏனிந்த மௌனம்.
சம்மதம் ஆகுமா…?

…சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6971

Follow

Get every new post delivered to your Inbox.