புத்தாண்டே வருக…!

சித்திரைப் புத்தாண்டே
நீ வருக.
திருப்பங்கள் கொண்டு
நீ வருக.

விருப்பங்கள் நிறைந்த
ஆண்டாய்..
விரும்பும் மனங்களுக்கு
விருந்து படைக்க
நீ வருக.

சாந்தியும் சமாதானமும்
தரணியெங்கும் நிறைந்திடவே
முத்திரை பதிக்குமாண்டாய்
நீ வருக.

பஞ்சமும் பட்டினியும்
அகன்று மக்கள்
மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவே
சித்திரையாள் நீ வருக.

…சிவனேஸ்…

Follow

Get every new post delivered to your Inbox.