
இளமைப் பருவமதில்
இதயத்து நெருடல்களால்..
எனக்குள்ளே வந்து..
உறவொன்றை வளர்த்தவளே…!
காலச் சக்கரத்துக்குள்
நாம் கவிதைகளானபோது
கற்பனை வானிலும்
சிறகடித்து பறந்தவளே…!
திரும்பும் திசைகளெல்லாம்
உன்முகமே தெரிய..
துள்ளிய மனதை
தொட்டுரசிச் சென்றவளே…!
காதல் சிறைக்குள்ளே
கட்டிவைத்து எனக்கு
காதலை கற்பித்து
கல்கண்டாய் இருந்தவளே…!
சொந்தங்கள் கூடியெம்மை
சேர்த்து வைக்குமென்றாயே
சுகமாக இருந்தது
சொன்னவுன் வார்த்தை.
விதிவரைந்த கோலத்தில்
விடு கதையாவோமென்று
எண்ணியதும் இல்லை
ஏனெமக்கு தொல்லை…?
சொன்னால் தீர்ந்திடுமா…?
சுமைகள்தான் இறங்கிடுமா…?
சாதியும் மதமுமிங்கு
கங்கடங்கள் செய்தது ஏன்..?
சாதி பார்த்தா காதலித்தோம்
தடுத்தெம்மை நிறுத்துதற்கு.
மதம் பார்த்தா முடிவெடுத்தோம்
மனமிரண்டும் சேர்வதற்கு…?
மங்கை உனக்குள்ளே
வந்துதித்த காதலை
மனமுவந்து ஏற்றதை
மறந்தேனோ போனாய்…?
வாடாத மலரே
கூடாத கற்பனையை
தேனோடு கலந்துனக்கு
தின்றுவிடச் சொன்னது யார்..?
காதலுக்கு மொழியில்லை
மதமும் இல்லை
சாதியும் இல்லை
சாட்சிகள் மட்டும்தான்
மனங்கள் இரண்டும்
மனம் வைத்தால்
திசைமாறாது காதல்
தெம்புடனே செல்லும்…!
உண்மைக் காதலுக்கு
இதுவொன்று போதும்
பொருந்துமா இது
பொய்யான காதலுக்கு.
நீ செய்த காதல்
நிலையற்று போனாலும்
இன்னும் நினைக்கிறேன்
காதலியாக உன்னை…!
…சிவனேஸ்…