நீ அங்கு நலமா…?

சொந்தமென்று   சொன்னதனால்
சுகம்   கேட்டு    எழுதுகிறேன்.
நான்   இங்கு   நலம்.
நீ    அங்கு   நலமா…?

அந்தி   மயங்கும்   வேளையிலே
அன்பே   நான்   உன்னோடு
பச்சை    புல்  வெளியில்
அமர்ந்திருந்து     அகமகிழ..

பகிர்ந்து   கொண்ட   நினைவுகளோ
பசு   மரத்து    ஆணிபோல்
பதிந்திருந்து    எனக்குள்ளே
பேருவகை     தருகிறது.

நானுனக்கு   சொந்தம்   என்று
சொன்ன   அக்கணப்   பொழுதை
நான்   நினைத்து  பார்க்கிறேன்.
நம்ப   முடியாமல்.    ……

உனக்கு   நானும்…
எனக்கு   நீயுமாய்    இருந்தாலும்
ஒரு  ஏக்கம்  எமக்குள்ளே
எம்காதல்    ஈடேறுமா…?   என்று

ஈடேறும்  நாள்  வரைக்கும்
எம்  உறவு   வளர்ந்திடட்டும்.
காதல்    உள்ளவரை 
நம்  உறவு   தொடர்ந்திடட்டும்

நினைவுகள்   தினம்   வாட்டுவதால்
கடுகதியாய்  கடுதாசி   வரைந்தனுப்பு.
உன்   சுகமறிய   காத்திருப்பேன்.    

…சிவனேஸ்…    
 

Follow

Get every new post delivered to your Inbox.