நிழலாய் நீயும்…!

தென்றலாய் நீயும்
தழுவியதால் என்னை
தேனுண்ட வண்டாய்
தினமுன்னை நினைத்து
தேடுது மனம் இங்கு.

என் மனத்திரையில் நீ…
காதல் பறவையாய்
காட்சி தருவதனால்
நேசத்துடன் பார்க்கிறேன்
நித்தம் உன் முகத்தை.

மயிலே…..
நீ… வந்தால்
என் வாசலுக்கு
நினைவுகள் நிசமாகும்
நெஞ்சமெனும் கங்கையிலும்
நாம் நீராடி மகிழ்ந்திடலாம்.

நினைவுகள் இனிக்கிறது.
நிழலாய் உனதன்பு…
தொடருமென்று…….!
நீயும் நேசித்தால்
காதலும் நிலைத்திடுமே..

புது உறவு வந்து
புது வசந்தம் வீசுமென்று
மனம்..
புதுக்ணக்குப் போட்டும்
புரியாமல் தவிக்கிறது.

புது மலரே…
புரிந்துகொண்டு நீயும் வந்தால்
புதுவாழ்வும் மலர்ந்திடுமே….!

…சிவனேஸ்…

Follow

Get every new post delivered to your Inbox.