நிலவே நீ வா…!

உன் நினைவுகளின் தேடல்களாய்
நான் தினமும் இருப்பதனால்
என்னுள்ளும் உன் நினைப்பு
தொடர்கதையாய் தொடர்கிறது.

உன்னோடு….
தொடர்பொன்றை ஏற்படுத்த
துடிக்கிறது என் இதயம்
ஆனாலும்… நெஞ்சுக்குள்….
ஓர் படபடப்பு…..!

அரும்பிய எம் உறவு
காதலாய் மலருமா…….?
இல்லை…..
கனவுகளாய் தொடருமா…….?

காதலாய் மலர்ந்தால்
காணும் மனது இன்பம்
கனவுகளாய் தொடர்ந்தால்
கண்ணீர்தான் மிஞ்சும்.

என்பதனால்……..
தாமரையிலையில் தண்ணீர்போல்
தவித்திடுமே என் நெஞ்சு..
என்றெண்ணி ஆசைகளை
இதயத்துள் அடைத்து வைத்தேன்.

ஆனாலும்…
இதயச் சுவரையும்
துளைபோட்டு ஈர்த்திட்ட
உன் அன்பை நேசிக்கிறேன்
நிலவே நீ வா……….!

Follow

Get every new post delivered to your Inbox.