நினைவெல்லாம் நீ….!

துள்ளுதே என் மனம் துள்ளுதே
நீ சொந்தமென்று சொன்னதும் துள்ளுதே
ஆடுதே மனம் ஊஞ்சல் ஆடுதே
உன் அன்பு மழையில் நனைந்தாடுதே.

சொந்தமென்று சொன்னபோது
வந்த சுகம் கொஞ்சமல்ல…
உன் கொலுசுமணி கேட்கையிலே
கெஞ்சும் மனம் அறிவாயா…….?

ஆயிரம் மலர்கள் மலர்ந்ததுவே
அதிலும் உன் முகம் தெரிகிறதே…
எனக்குள் நீ இருப்பதனால்தான் என்று
உள்மனம் உணர்ந்து கொள்கிறதே.

காதல் வலையில் சிக்கிவிட்டோம்
காலம் கனிந்து வரும் காத்திருப்போம்
கனவுகள் இனி நம் சொந்தங்கள்
காத்திருந்து நாம் களிப்படைவோம்.

உன் இளமைத் தீவில் நானிருந்து
உன்னோடு வாழும் காலம்வரை
மற்றவர் எம்மை போற்றிடவே
மகிழ்வுடன் நாமும் வாழ்ந்திடுவோம்.

…சிவனேஸ்…

www.thamilworld.com/forum/index.php?showtopic=456

Follow

Get every new post delivered to your Inbox.