தொலைதூரப்பூவா நீ…?

நீலவான  ஓடையிலே
நீந்தி     வரும்     வெண்ணிலவாய்
 பூவே       உன்முகம்  கண்டு
மனம்  தொலைத்தேன்.

மனம்  தொலைத்த
நாள்முதலாய்
தேடி   நான்  ஓடி _ உன்
முகவரியை   தேடுகிறேன்

தொலைதூரப்பூவென்று..
சொன்னாலும்…
என்   மனது
அடம்பிடித்து    தினம் அழுது
நீவேண்டும்  தனக்கென்று
மவெழுதி   குவிக்கிறது.

தவிப்பறிந்து   நீயுணர்ந்தால்
தந்துவிடு    இதயத்தை
கன்னித்    தீவினிலே_  நாம்
காதலித்து    மணமுடிப்போம்.   

…சிவனேஸ்….