தேடுது உன்னை…!

இசையும் கதையுமாய்
எனக்குள் நுழைந்தாய்…!
ஏனென்று தெரியாமல்
எனக்குள் அவலம்…!

உதட்டின் அசைவுகளோ
உறவொன்று பிறப்பதை
உறுதி செய்யவே..

கண்களோ செய்யுது
எனக்குள் கலகம்
கண்மணி உனக்கு
என்மீது காதலா…?

காதலைச் சொல்லி..
காதலிக்க முன்பு
காத்திருந்து காதலிப்பதும்
காதலுக்கு சுகம்தான்.

கண்டிருந்தால் உனக்குள்
காதலின் சுகத்தை…
கச்சிதமாய் எழுதி
காகிதத்தில் அனுப்பு.

காத்து இருப்பதும்
காதலுக்கு வேதனைதான்.
காலம் போனால்
காதலும் வாடும்…!

பேதை உனக்கு
புரியாது இன்று
போதுமடி நீ..
செய்தது குறும்பு

மனமோ தினமும்
தேடுது உன்னை
மங்கையுன் மனதுள்
காந்தமா இருக்குது.

கவர்ந்து எடுத்து
காதலைச் சொல்ல
உள்ளமோ தினமும்
உன்னையே நாடுது.

…சிவனேஸ்…