தனிமை…!

தனிமை எனும்
இருட்டறைக்குள்..
வந்து போகும்
நினைவுகளால்..
நொந்து மனம்..
அழுது புலம்பி..
தன்னையும் மறந்து..
தனிமையில் தோய்ந்து
சுடுமணலில் நடந்து
சோகங்களை சுமந்து
மீள முடியாமல்
மனம்மிக நொந்து
புளுவாய்த் துடித்து
புரியாமல் தவிக்கையில்
புரிந்திடும் உணர்வு.
தனிமைக்கும் உண்டு
தனித்துவம் என்று.

…சிவனேஸ்…