காத்திருப்பேன்.

சிரித்துச்   சிரித்தென்னை
காதல்   சிறைக்குளடைத்ததனால்
அன்பு   வதைபட்டு..
ஆழப்பதிந்துவிட்ட   நம்முறவு..

ஆல   விருட்சமாய்
ஆகுமென்றும்..
ஆலம்   விழுதுகள்போல்
வேறூன்றி    விளையுமென்றும்

ஆசைமொழி    நீ   சொல்ல
அதற்கிணங்கி    நானும்
வழிமொழிந்தேன்.

காலங்கள்  சென்றதனால்
காதலை    ஏன்…சோதித்தாய்…?
காதலும்தான்   உன்னிடத்தில்
பாவமென்ன   செய்ததுவோ…?

இதயத்துள்   இருந்த   என்னை
இறக்கி  வைத்து   சிரித்தாலும்
போதுமுன்    காதலென்று   நான்
புறந்தள்ள   விரும்பவில்லை….!

வேண்டுமுன்  உறவென்று
தேடுகிறேன்   நானுன்னை.
சிந்தித்து  சிலவரிகள்  உன்
பூவிரலால்    எழுதிவிடு.

மௌனமாய்   நானிங்கு   உன்     
மடலுக்காய்  காத்திருப்பேன்.

…சிவனேஸ்…

Follow

Get every new post delivered to your Inbox.