காதல்.

பொல்லாத காதலுக்கு..
புரியாமல் இரையாகி..
புழுவாய் துடிப்பதுதான்..
புதிராக இருக்கிறது.

கல்லான மனங்களையும்
கனியவைக்கும் காதலிது.
காலங்கள் போனாலும்
திடகாத்திரமாய் தானிருக்கும்.

கொல்லாமல் கொன்றபின்பும்..
அவள் கொலுசொலிக்காய்..
காத்திருக்கும்
அசையாத காதலிது.

அதனால்தான் ஓர் தவிப்பு
ஏமாற்றம் வந்தாலும்..
அன்பு கொண்டவளை
அணைத்திடவே மனந்துடிக்கும்.

காதல் காதலென்று
கனவுகளில் மிதப்பவரும்
கண்களை மூடிக்கொண்டு
காத்திருந்து ரசிப்பவரும்..
காதலுக்கு அடிமைதானே…..?

காதல் இல்லையென்றால்
வாழ்க்கையும் இங்கில்லை..
வசந்தமும்தான் வந்திடுமோ…?

…சிவனேஸ்…