காதல் வளரட்டும்.

சொல்லாமல்    வந்து
சொல்லாமல்   நுழைந்து
சொல்லாமல்    திருடினாய்
என்   இதயத்தை…

அதனால்..
சுகங்களை  தொலைத்து
இளமையைக்    குலைத்து
மனமோ..  தவிக்குது
உன்   காதலுக்காய்.

தெரியாமல்  திருடினாலும்
திருப்பித்   தரவேண்டாம்.
பத்திரமாய்   உனக்குள்
பக்குவமாய்  வைத்துக்கொள்.

இதயங்கள்  இரண்டும்
மௌனமாய்   பேசி
கருத்துக்களை   பரிமாறி..
காதலை  வளர்க்கட்டும்.

…சிவனேஸ்…

Follow

Get every new post delivered to your Inbox.