கதிரவன்.

கருமுகில் கூட்டங்கள்
வானத்தை கௌவ்வி-அங்கு
அராஜகங்கள் செய்ய..

வைகறைப்பொழுதோ புலராமல்
தவித்து தனித்திருக்க..
பூமித்தாயும் அங்கு
அழுது கண்ணீர்வடிக்க..

பொறுக்காத கதிரவன்
வீரம் கொண்டு…
இடறறுத்து புறந்தள்ளி
வானத்தில் வந்துதிக்க

மகிழ்ச்சி பொங்கி- அங்கு
மக்களும் ஆடினர்..
ஆனந்தக்கூத்து.

…சிவனேஸ்…