ஏழைமனம்.

ஏழையின்  மீது
இரக்கமோ    அதிகம்.
இருந்தாலும்      ஏனோ
கொடுக்கமனம்    மறுக்கும்…!

சேர்த்து   வைத்து
இறுமாப்புக்   கொண்டு
ஏப்பமிடும்….
கன   தனவானும்..

வர்க்கபேதம்   பார்த்து
வகைப்   படுத்தும்
மனிதர்களும்..
ஏழையின்  வாழ்வை
எண்ணியும்  பார்பதில்லை.

இருப்பதை   வைத்து
கால்  வயிற்றுப்பசியாறி
கையேந்தும்    ஏழைகள்தான்
போடுகின்ற   சில்லறைக்காய்
நல்லாய்   இருப்பாயென்று
அவர்களையும்  வேண்டிக்கொள்ளும்.

…சிவனேஸ்…

Follow

Get every new post delivered to your Inbox.