என்ன விந்தையோ…?

கலியாணச்     சந்தையிலே
வெளிநாட்டு   மாப்பிள்ளைக்கு
முன்னுரிமை    அளித்து.
கைநிறைய   சீதனமும்
கல் வீட்டோடு   காணியும்
கொடுக்கின்ற…
எம்மவர்கள்  மனங்களில்தான்
எத்தகைய  இலட்சணங்கள்.
சம்பந்தம்  சரிவந்தால்;..
சம்பந்திமாருக்கும்   சந்தோசம்.
அவன்;
அந்நியதேசத்தின்   அழுக்குகளை..
தினமும்;..
கை ஓயாமல்   கழுவினாலும்..
இவர்களுக்கு   ஆட்சேபனையில்லை…!
ஆனால்….ஒருவன்
தன்தேசத்து   அழுக்குகளை..
கழுவும்போது    மட்டும்
இவர்கள்..
வர்க்கத்துக்குள்   வகைபிரித்து
வேடிக்கை   பார்ப்பதுதான்
விந்தையாக   இருக்கிறது.

…சிவனேஸ்…

(ஈழமுரசு   வாரமலர்  பாரிஸ்_18.12.1992)