உன்னால்தானா…?

அன்பே……
இந்தப் பூக்களெல்லாம்
உன்னை கண்டபின்புதான்
பூத்தனவா…?

இல்லை
உன்னை பார்த்துத்தான்
சிரிக்கவும்..
மனம் கவரவும்
கற்றுக்கொண்டனவா…?

இல்லை..உன்
அழகு கண்டுதான்..
இவைகளும்
அழகாயிருக்கின்றனவா…?

இல்லை..
உன் மனப்பக்குவம்
பார்த்துத்தான்
இந்த பிரபஞ்சத்தில்
இவைகளும் வாழ
கற்றுக்கொண்டனவா…?

…சிவனேஸ்… http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6506