உனக்காக…!

எனக்காக பிறந்தவளே..
எதற்காக இந்த மௌனம்….?
காதலின் தவிப்பு தனை
காணுவதே இன்பமா உனக்கு…?

போதும் உன் மௌனம்
புரியாதா எனக்கு….?
இதயத்துள் நீ இருந்து
இம்சைகள் பல செய்கின்றாய்

ஏற்ற மனச் சுகத்தை
இறக்கி வைக்க மறுக்கிறது.
இன்னும் சுகம் தேவையென்று
சொக்கி மனம் நிற்கிறது.

பதியம் வைத்த நம்காதல்
பக்குவமாய் வளர்ந்திடவே
காத்திருந்து காத்திடுவோம்
வாழ்க நம் காதல்.
வளர்க நம் உறவு.

…சிவனேஸ்…

http://www.forum.vettimani.com/

Follow

Get every new post delivered to your Inbox.