உனக்காக நான்….!

காதல் கொண்டு உன்மீது
கவிதை எழுதி தினந்தோறும்
காத்திருந்து வளர்த்த காதல்
காலத்தால் காலாவதியாகிடுமோ….!
என்று மனம் ஏங்குவதால்..
இனியவளே கேட்கின்றேன்….?

மனமொத்த காதலிது.
மனம்போல வாழவேண்டும்.
நினைவுகளை நிசமாக்கி
முழுமைபெற்ற காதலென்று
முடிந்தவர்கள் சொல்லவேண்டும்
என்று மனம் எண்ணுவதால்

நீ எனக்கு சொந்தமென்று
நீண்ட வரி எழுதாமல்
காதலிப்பதாய் ஒரு வார்த்தை
கண்மணியே நீ எழுதி
காட்டுவாயா காதலுக்கு
பச்சைக்கொடி எனதன்பே….?

…சிவனேஸ்…

Follow

Get every new post delivered to your Inbox.