ஆசை…!

நினைவுக்குள்     வந்தாய்.
நிலவென்று    அழைத்தேன்.

கண்ணுக்குள்    வந்தாய்
காதலியென்று    அழைத்தேன்.

மனதுக்குள்      வந்துவிட்டாய்…!
எப்படி     நானழைக்க…?

ஆசைதான்    சொல்ல..
ஆனாலும்    தயக்கம்.

பூவுக்குத்      தெரியாதா…?
புதிர்போட்டுச்    சொல்லுவது..?

பூவும்   எனக்குத்தான்
புன்னகையும்    எனக்குத்தான்.

புரிந்திருக்கும்    உனக்கு 
அதுபோதும்    எனக்கு.

…சிவனேஸ்…

Follow

Get every new post delivered to your Inbox.