
வானத்து பெண் மயிலே
வாசமுள்ள பூங்காற்றே…!
வாடகைக்கு குடியிருக்கும்
வாலிபத்தின் அகல்விளக்கே.
பாசமுள்ள உன்னை
நேசமுடன் அங்கு
வான்வெளியில் வீடமைத்து
வாழவுன்னை சொன்னது யார்…? .
…சிவனேஸ்…
ஆகஸ்ட் 9, 2009 இல் 7:16 பிற்பகல் (நிழலோடு...!)

வானத்து பெண் மயிலே
வாசமுள்ள பூங்காற்றே…!
வாடகைக்கு குடியிருக்கும்
வாலிபத்தின் அகல்விளக்கே.
பாசமுள்ள உன்னை
நேசமுடன் அங்கு
வான்வெளியில் வீடமைத்து
வாழவுன்னை சொன்னது யார்…? .
…சிவனேஸ்…
ஆகஸ்ட் 9, 2009 இல் 6:29 பிற்பகல் (வேதனைகள்.)

தூங்காத விழிகளுக்குள்
சுகங்களங்கு போராட்டம்.
ஈரமான விழிகளுக்குள்
எண்ணங்களின் தேரோட்டம்
வற்றாத நினைவுகளோ
வந்து வந்து தாலாட்டும்.
பொற்காலம் வந்துவிடும்
போதுமென்று மனம் சொல்லும்.
வந்ததெல்லாம் பொய்யென்று
வாயடைக்கும் கண் சிவக்கும்.
காதோரம் நீர் வழிந்து
கன்னத்தை ஈரமாக்கும்
வற்றாத நதிக்குள்ளே
காட்டாறு பெருக்கெடுக்கும்
இயற்கைக்கும் உன்மீது
இரக்கமங்கு வந்துவிடும்
ஏற்காத உன் மனது
எட்டியதை உதைத்துவிடும்
உற்றாரை திட்டிடுவாய்
உறவினரை பகைத்திடுவாய்
உனக்குள்ளே வந்ததெல்லாம்
உண்மையென்று நினைத்திடுவாய்.
ஏற்க மறுத்துவிடும்
இளமையிது பொல்லாது.
சோகங்கள் தந்ததெல்லாம்
வேதனையின் சுவடுகளே…!
வெந்து நீ மடியாமல்
வேதனையை சுகமாக்கு.
விடியல் தேடி வரும்
வேதனைகள் ஓடிவிடும்.
…சிவனேஸ்…
ஆகஸ்ட் 8, 2009 இல் 9:45 மு.பகல் (சினிமாத்துளிகள்.)
ஈழத்துக் கலைஞர் ஒருவரின் அயராத முயற்சியில் உருவாகி வெகு விரைவில் வெள்ளித்திரைகளுக்கு வரவிருக்கும் திரைப்படம் மதுரை ரு தேனி. இத்திரைப்படத்தில் அரவிந் வினோத் சிறீதிகா முத்துக்காளை காளைமுத்து மற்றும் முன்னணிக் கலைஞர்கள் நடித்துள்ளனர்.
மாறுபட்ட நடிப்புடன் மனதைக்கவரும் காட்சிகளையும் அமைத்து
கிராமத்து மண்வாசனையை மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் ஆசிரியர் ரதிபாலா. இளம் உள்ளங்களின் எதிர்பார்ப்பு இத்திரைப்படம் என்கிறார்கள் இப்படத்தின் க லைஞர்கள்.
நாமும் காத்திருக்கிறோம் பார்ப்பதற்கு.
ஈழத்துக்கலைஞன் கே. விமலனின் இம்முயற்சி வெற்றி பெற நானும் வாழ்த்துகிறேன்.
…சிவனேஸ்…
இங்கு அழுத்தவும்..
ஆகஸ்ட் 3, 2009 இல் 10:08 மு.பகல் (பாட்டும் பதமும்.)
ஈஸ்ட்மன் கலராய்…
இதயத்துள் நுழைந்து..
பசுமையாய் அங்கு..
பதிந்துவிடும் காட்சிகளே..
…கனவுகள்…
ஆகஸ்ட் 2, 2009 இல் 2:50 பிற்பகல் (வசந்தம் வீசும்.)
நினைத்துப் பார்த்தால்
சகிக்க முடியாது.
மௌனம் அழுதுவிடும்
மறக்கவும் முடியாது.
சுமைகளே வாழ்க்கையாகும்.
சொந்தங்களும் துரத்திவிடும்.
சோகம்தான் வாழ்க்கையென்று
சுகங்களும் சொல்லிவிடும்.
எண்ணிப் பார்ப்பவர்க்கு
உன் மீது ..
இரக்கம் ஊற்றெடுத்து.
ஆறாய் ஓடி வரும்.
மனச்சாட்சி உன்னை
மறுபடியும் வதை செய்யும்.
திருந்தி நீ வாழ
சிந்தனைகள் சிறகடிக்கும்.
முந்தி விட்ட பிழைகளை
பிந்தி வந்த செய்திகள்..
பந்திகளாய் பக்குவமாக்க..
தென்றலுன்னை தாலாட்டும்.
ஏமாறாமல் இனி இருந்து..
மனிதனாய் நீ வாழ்ந்தால்..
மறுபடியும் வசந்தம் வாழ்வில்..
வந்துன்னை தாலாட்டும்.
….சிவனேஸ்….