ஜூலை 9, 2007 இல் 9:07 மு.பகல் (நிழலோடு...!)

ஓவியமாய் நீ
எனக்குள் இருந்து
உணர்வுகளை செதுக்குவதால்
உறங்காமல் தவிக்கிறது.
உண்மையான அன்பு.
உணரவேண்டும் நீயும்..
அலைமோதும் நினைவுகளோ..
ஆளவேண்டும் உன்னையும்
அப்போது தெரியும்
அன்புப் பிணைப்பென்றால்
அறுக்காத சங்கிலியென்று…!
…சிவனேஸ்…
கருத்துத் தெரிவிக்கவும்
ஜூலை 7, 2007 இல் 11:15 மு.பகல் (மனமொத்த காதல்.)

அவனும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்.
காதல் பிறந்தது.
கதைத்து மகிழ்ந்தனர்.
சாதி இவர்களை
தடுத்து நிறுத்தியது.
மதமும் அங்கு
மல்லுக் கட்டியது.
பாவம் அவர்கள்..
காதலும் பயந்தது.
கண்ணீர் வடித்து..
கதறி அழுதது.
ஊரவர் திரழ
உளறு வாய்களும்
ஊதித் தள்ளின.
வேண்டாம் இதுவென்று…!
ஆனால்.. இவர்களோ..
காதலை வளர்த்தனர்.
சாதியும் மதமும்..
உரமாய் போயின.
மனங்கள் இரண்டும்
மாறாமல் இருந்ததனால்..
மணவாழ்வில் இணைந்து
மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர்.
…சிவனேஸ்…
கருத்துத் தெரிவிக்கவும்
ஜூலை 4, 2007 இல் 12:31 பிற்பகல் (தீண்டாமை.)

அரும்பான போது
ஆனந்தம் ஆனந்தம்.
மொட்டாகி நானும்
பூவாக வேண்டுமென்று…!
புதுக்கனவு எனக்குள்
புதுப்புது அர்த்தங்கள்.
புரியாமல் தவித்தேன்.
பூவாக வேண்டுமென்று…!
சேகரித்த நினைவுகளோ
சேர்ந்திருந்து தொல்லைதர..
சோராமல் தவித்திட்டேன.;
பூவாக வேண்டுமென்று…!
பொறுமை நானிழந்து
பூமியில் வாழ்வதுவும்..
பொய்யென்று எண்ணுகையில்
பூவாக நான் மலர்ந்தேன்.
இப்போது நினைக்கின்றேன்.
எனக்குள்ளே புலம்புகிறேன்.
ஏன்தான் பூத்தேனோ…?
அப்படியொரு வெறுப்பு.
மனித வர்க்கத்துக்குள்
எத்தனை முரண்பாடுகள்…!
நாகரீகமற்ற சிந்தனைகள்.
நாளும் தொடருவது…!
ஏற்றத் தாழ்வுகளால்
ஏற்படும் தொல்லைகளோ
ஏராளம் என்றுணர்ந்தும்
ஏனிந்த வேசங்கள்…?
பூக்களைப் பற்றியெல்லாம்
புதுப்புதுக் கவிதைகள்.
புனைந்து எழுதிடுவார்.
புதுப்புதுக் கவிஞர்கள்…
பாவம் அவர்களும்
மனதுள் பட்டதையெழுதுகிறார்.
பாராட்டுப் பெறுவதற்காயல்ல.
தீண்டாமை..
ஒழியவேண்டும் என்பதுக்காய்.
சிந்தனைகளைச் சேர்த்து
செதுக்கிய கவிதைகளை..
படித்தபின்பு சொல்லிடுவார்..
சிறப்பாக இருக்குதென்று.
சிந்தித்தால் தீருமல்லவா…?
தீண்டாமை ஒழியுமல்லவா…?
திருப்பங்கள் ஏற்பட்டு
சமுதாயம்..
புதுப்பொலிவு காணுமல்லவா…?
…சிவனேஸ்…
கருத்துத் தெரிவிக்கவும்